Breaking News
Home / தமிழ்நாடு

தமிழ்நாடு

Ut wisi luctus ullamcorper. Et ullamcorper sollicitudin elit odio consequat mauris, wisi velit tortor semper vel feugiat dui, ultricies lacus. Congue mattis luctus, quam orci mi semper

புதுக்கோட்டை திருமயம் அருகே,லாரியும், வேனும் மோதிக்கொண்ட கோர விபத்து!

புதுக்கோட்டை திருமயம் பிரிவு சாலையில் கண்டெய்னர் லாரியும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெம்போ டிராவலர் வேனில் ஆந்திராவைச் சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்டோர் கோயிலுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வேன் புதுக்கோட்டை திருமயம் பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென எதிரே வந்த கண்டெய்னர் லாரியில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த …

Read More »

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது விரைவில் கட்டாயமாக்கப்படும்!

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது விரைவில் கட்டாயமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.ஆதார் தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது எனத் தீர்ப்பளித்தது. மிக முக்கியமாக குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் ஆதார் இல்லை என்பதற்காக மறுக்கக் கூடாது என உத்தரவிட்டது. மேலும் குழந்தைகளுக்கு ஆதாரம் கட்டாயம் எனவும், ஆதார் சட்டத்தில் சில திருத்தங்களை …

Read More »

நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! தமிழக அரசு எச்சரிக்கை!!

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தமிழக அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும் அரசு எச்சரித்து உள்ளது. இது குறித்து அனைத்துத் துறைச் செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எழுதியுள்ள கடிதத்தில், நாளை மற்றும் நாளை மறுநாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு ஒருசில தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி அரசு நிர்வாகத்தைப் …

Read More »

திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து! தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் காலியான இத்தொகுதிக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. வருகிற 28ந் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடைபெற்று வந்தன. தி.மு.க. மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், கஜா புயல் பாதிப்பின் காரணமாக திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் ஒத்திவைக்க வேண்டும் …

Read More »

திருவாரூரில் தேர்தல் நடத்த முடியுமா?! ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு!!

திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா? முடியாதா? என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹ_ உத்தரவிட்டுள்ளார். காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. ஜனவரி 28இல் வாக்குப் பதிவும், ஜனவரி 31 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தல் …

Read More »

பொங்கல் சிறப்பு பரிசு தொகை வழங்கும் திட்டம்!

பொங்கல் தொகுப்போடு சிறப்பு பரிசு தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். பொங்கல் சிறப்பு தொகுப்புக்கான அறிவிப்பு கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலாக்காய், கரும்புத்துண்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 2 கோடியே 1 லட்சத்து 91 ஆயிரத்து 54 நியாயவிலை அட்டைத்தாரர்களுக்கு …

Read More »

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிப்பு

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில், திமுக சார்பில் பூண்டி கலைவாணனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.காமராஜூம் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கலைஞரின் மறைவை அடுத்து, காலியாக உள்ள திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை இறுதி செய்வதற்கான நேர்காணல், அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நேர்காணலில், வேட்பு …

Read More »

புதைவட மின்கம்பிகள் கண்டுபிடிக்கப்படாததால், உயர்அழுத்த மின்கோபுரங்கள் அமைப்பதைத் தவிர, வேறுவழியில்லை

800-கிலோவாட் மின்சாரத்தை கொண்டு செல்லும் புதைவட மின்கம்பிகள் கண்டுபிடிக்கப்படாததால், உயர்அழுத்த மின்கோபுரங்கள் அமைப்பதைத் தவிர, வேறுவழியில்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். விளைநிலங்கள் வழியாக உயர்அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கக் கூடாது என விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, 800 கிலோவாட் மின்சாரத்தை கொண்டுசெல்ல புதைவட மின்கம்பிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றார். அமெரிக்காவில் கூட இத்தகைய புதைவடங்கள் …

Read More »

கஜ புயலால் சேதம் அடைந்த பைபர் படகுகளுக்கான,நிவாரண நிதி ஒன்றரை லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்

கஜ புயலால் சேதம் அடைந்த பைபர் படகுகளுக்கான நிவாரண நிதி ஒன்றரை லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என, சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். கஜ புயல் பாதிப்பு குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கஜ புயல் குறித்து வானிலை ஆய்வுமையம் முன்னறிவிப்பு கொடுத்த உடனே தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார். கஜ புயலினால் …

Read More »

சபரிமலையில் 2 பெண்கள் நுழைந்த விவகாரம் தமிழகம் முழுவதும் வழுக்கிறது எதிர்ப்பு!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் இருவர் வழிபாடு நடத்தியதை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 01. கேரளாவிலுள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் 2 பெண்கள், கோவிலின் பின்புற வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை சாமி தரிசனத்திற்காக அனுமதித்த கேரள அரசை கண்டித்து, சபரிமலை பாதுகாப்பு இயக்கம் …

Read More »