Breaking News
Home / மாவட்டம்

மாவட்டம்

Et ullamcorper sollicitudin elit odio consequat mauris, wisi velit tortor semper vel feugiat dui, ultricies lacus. Congue mattis luctus, quam orci mi semper

டி.எஸ்.பி.விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.தொடர்ந்து விசாரிக்கலாம்!

டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. தொடர்ந்து விசாரிக்கலாம் என கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி விஷ்ணுபிரியா அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று அவரது தந்தை ரவி தொடர்ந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரித்தால் உண்மை வெளிவராது என்றும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். …

Read More »

வரும் 15-ஆம் தேதி கடலூர்-பாம்பன் இடையே கஜ புயல் கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு

கஜ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், மாநில பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் சத்யகோபால், வருவாய்த்துறைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோரும் கலந்து …

Read More »

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். தென் தமிழகத்திலும் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவித்த பாலச்சந்திரன், இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழை …

Read More »

மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது

ஆளுநர் பணியில் தலையிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நக்கீரன் கோபாலை சென்னை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னையில் இருந்து புனே செல்லவிருந்த போது விமான நிலையத்தில் வைத்து கோபால் கைது செய்யப்பட்டார்.சந்தன மரக் கடத்தல் வீரப்பனுடன் தொடர் நேர்காணல் நடத்தியதன் மூலம் பிரபலமான இவர், தமிழக அரசுக்கும் – வீரப்பனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

தற்காலிக முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

6 மாத ஒப்பந்த அடிப்படையில் 1,474 தற்காலிக முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பகுதி நேர ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் சிறப்பாசிரியர்கள் 16 ஆயிரத்து 500 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர். அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் மத்திய அரசு வழங்கியுள்ள நிதி மூலம் முதல் கட்டமாக ரூபாய் 5,000 ஊதியம் வழங்கப்பட்டது. இதையடுத்து பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை. ஏனெனில் இதற்கு …

Read More »

எந்த தேர்தல் வந்தாலும், சந்திக்க தயாராக இருக்க வேண்டும்! தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!

எந்த தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்குமாறு தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் நகராட்சி மைதானத்தில் தி.மு.க கட்சியின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், சிறப்புறையாற்றினார். அப்போது பேசிய அவர், தேர்தல் களத்திற்கு தயார் ஆகிவிட்டதை இக்கூட்டம் பறை சாற்றுகிறது என்று தெரிவித்தார். மேலும், கருணாநிதி சாதிக்க முடியாததை கருணாநிதியின் மகன் சாதித்து விட்டார் …

Read More »

மாணவியின் மனித நேயத்தை பாராட்டி புது சைக்கிளை பரிசாக வழங்கிய நிறுவனம்

குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவர் அப்துல் ஆசிம் கடந்த சில வருடங்களாக இவர் குடும்பத்துடன் நாகர்கோவிலில் வசித்து வருகிறார். இவரது மகள் சஜீரா பாத்திமா. 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த மாணவிக்கு உண்டியலில் பணம் சேரிக்கும் பழக்கம் உண்டு. கடந்த சில நாட்களாக இவர் சைக்கிள் வாங்க ஆசைப்பட்டு அதற்காக உண்டியலில் பணம் சேகரித்து வந்தார்.கடந்த 2 வாரங்களுக்கு மேலாக கேரளாவில் பெய்த கன மழையில் பலர் வீடு, உடமைகளை …

Read More »

கொடைக்கானலில் விவசாயிகள் தண்ணீர் கேட்டு, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

கொடைக்கானலில் விவசாயிகள் தண்ணீர் கேட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான கிளா வரையில் 500-க்கும் மேட்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இப்பகுதியில் உருளைக் கிழங்கு இகேரட் இபூண்டு உள்ளிட்ட பணப் பயிர்கள் பயிரிட்டு வருகின்றனர் . அப்பகுதி விவசாயிகளுக்கு குடிநீர் ஆதாரமாக துளுக்கம்பட்டி அணையை கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் ஒரு கோடியே 10-லட்சம் …

Read More »

திமுக தலைவர் கலைஞர் இல்லாத தமிழ்நாட்டை நினைத்து கூட பார்க்க முடியவில்லை-நடிகர் ரஜினிகாந்த்

தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் ஃபெப்சி அமைப்பின் சார்பில் மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையிலுள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நாசர், விஷால், ராதாரவி உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பலர் கலந்து கொண்டு கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி கலைஞர் குறித்த நினைவுகளை …

Read More »

ஒரே ஆண்டில் 2வது முறையாகமேட்டூர் அணை நிரம்பியது!

மேட்டூர் அணை தற்போது 2-வது முறையாக நிரம்பி இருப்பதால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் அம்மாநிலத்தில் உள்ள அணைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் கனஅளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி நீரும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 55 ஆயிரம் கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. …

Read More »