Breaking News
Home / சினிமா

சினிமா

அஜித்தின் அடிச்சி தூக்கு பாடல் சாதனை

வீரம், வேதாளம், விவேகம் படங்களுக்கு பிறகு 4–வது முறை இந்த படத்தில் அஜித்தும், சிவாவும் இணைந்துள்ளனர். நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். ரஜினிகாந்தின் பேட்ட படமும் பொங்கலுக்கு வருவதால் இரண்டு படங்களும் மோதுகின்றன. பேட்ட படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் விஸ்வாசம் குழுவினரும் ஒரு பாடலை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். அறிமுக பாடலாக கருதப்படும் இந்த பாடலில் அஜித் வயதான தோற்றத்தில் கம்பீரமாக தோன்றி நடனம் ஆடுகிறார். அங்காளி பங்காளி என்று பாடல் …

Read More »

ரஜினிகாந்துடன் நடித்தது மகிழ்ச்சி- திரிஷா

பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்தது பெருமை என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார். ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துக்கு சிம்ரன், திரிஷா என்று 2 ஜோடிகள். திரிஷா பிளாஷ்பேக் கதையில் வருகிறார். அவருக்கு படத்தில் கொஞ்ச நேர காட்சிகள்தான் என்றாலும் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்டநாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக நடிக்க ஒப்புக்கொண்டார். ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்தது பெருமை என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

Read More »

ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், சூப்பர் ஸ்டாராகவும் வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த், தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ரஜினி பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களின் மூலம் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், ரஜினியின் நண்பருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், என் பல ஆண்டு …

Read More »

10 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீசாகும் ரஜினியின் 2.0

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் – அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் 2.0 படம் உலகம் முழுக்க சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீசாகவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படம் வருகிற 29-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. மேலும் பல மொழிகளில் ‘டப்பிங்’ செய்தும் வெளியிடுகின்றனர். இந்த படம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 10 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுவதாக …

Read More »

இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன்

கனடாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்கவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார்.  கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் …

Read More »

அறம்-2 படத்தில் மக்கள் இயக்கத்தை துவங்கும் நயன்தாரா

கோபி நயினார் இயக்கத்தில் உருவாகும் அறம் 2 படத்தில், நயன்தாரா தனது கலெக்டர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் இயக்கம் துவங்கி போராடுவதே படத்தின் கதைக்களமாக வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்திருந்த படம் அறம். விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது.அதன்பிறகு அறம் 2 திரைப்படம் எடுக்க உள்ளதாக கோபி நயினார் அறிவித்திருந்தார். இப்படத்தில் நயன்தாரா புதிதாக மக்கள் …

Read More »

ராஜமௌலியின் அடுத்த படத்தை தொடங்கி வைத்தார் சிரஞ்சீவி

‘பாகுபலி’ என்னும் வெற்றிப் படத்தை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இரண்டு பாகங்களாக உருவான இந்தப் படம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியான இந்தப் படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜமௌலி என்ன படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது.தற்போது தன்னுடைய அடுத்த படத்தை தொடங்கியிருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமெளலி. …

Read More »

‘மீ டூ’வை பழிவாங்க பயன்படுத்துகின்றனர் – நடிகர் விஷால்

நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகளும் பெண் இயக்குனர்களும் மீ டூவில் பாலியல் புகார் கூறி வருகிறார்கள். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அளித்துள்ள பேட்டி வருமாறு:- “பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகம் உள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடிகைகள் பணிசெய்யும் இடத்தில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வாய்ப்புக்காக பாலியல் தொந்தரவுகளுக்கு …

Read More »

எதிர்ப்பை மீறி ரூ.125 கோடி வசூல் தாண்டியது ‘சர்கார்’

விஜய்யின் சர்கார் படம் எதிர்ப்பை மீறி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.அமைச்சர்கள் எதிர்ப்பாலும், அ.தி.மு.க.வினர் போராட்டங்களாலும் சர்கார் பட தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதாக தியேட்டர் அதிபர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எதிர்ப்புகள் படத்துக்கு விளம்பரம் தேடி தந்துள்ளது என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். உலகம் முழுவதும் சர்கார் 2 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்ததாகவும், இந்திய அளவில் இந்த தொகை 3 நாட்களில் கிடைத்தது என்றும் கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் பாகுபலி …

Read More »

கனா படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் `கனா’. நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கணையாக நடித்திருக்கிறார். அவரது அப்பாவாக சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், …

Read More »