Breaking News
Home / தமிழ்நாடு / வெடிமருந்து தொழிற்சாலை மூடும் நிலை தொழிளாளர்கள் பல கட்டப் போராட்டம்

வெடிமருந்து தொழிற்சாலை மூடும் நிலை தொழிளாளர்கள் பல கட்டப் போராட்டம்

நீலகிரி மாவட்ட குன்னூர் அருகே உள்ள அருவங்காடு கார்டைட் வெடிமருந்து தொழிற்சாலை மூடும் நிலையில் உள்ளதால் தொழிளாளர்கள் பல கட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 3ம் கட்ட போராட்டமாக தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நமது இந்திய ராணுவத்தின் முதுகெலும்பாய் விளங்குகின்ற வெடி மருத்து தளவாட தொழிற்சாலையின் முதன்மையாக விளங்குகின்ற கார்டைட் தொழிற்சாலை ஆகும். மத்திய அரசின் வெடி மருத்து தளவாடப் பொருட்களை வெளிநாட்டிலிருந்து கொள்முதல் செய்கின்ற தவறான கொள்கையால் உள்ளூர் உற்பத்தி குறைந்து தொழிற்சாலை நலிவு அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களின் வேலை இழக்கும் நிலை உள்ளது .இதற்கு முன் ஊட்டியில் உள்ள HP F தொழிற்சாலையும் இதே நிலையை மத்திய அரசு உருவாக்கி தொழிற்சாலையை மூடி விட்டனர் அதேப்போல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய மத்திய அரசுக்கு சொந்தமான இந்த வெடிமருந்து தொழிற்சாலையில் உற்பத்தியை குறைத்து மூடும் நிலை ஏற்பட்டால் சுமார் 2500 தொழிளார்கள் அதை நம்பி உள்ள வியாபாரிகள் அனைவரும் பாதிக்கபடும் அபாயம் உள்ளது. எனவே இந்த தொழிற்சாலையின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என கார்டைட் தொழிற்சாலை கூட்டமைப்பினர் கேட்டுக் கொண்டனர். இதில் CFLU – யூனியன் தலைவர் சாந்தக் குமார் முன்னிலை வகிக்க  FLU ஒருங்கிணைப்பாளர் அனுராஜன் தலைமையேற்றனர். மேலும் இதற்கான நல்ல தீர்வு கிடைக்காவிட்டால் ஜூலை மாதத்தில் இருந்து தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த தர்ணா போராட்டத்திற்கு கார்டைட் தொழிற்சாலை ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். பேட்டி சாந்தகுமார் CFLU தலைவர்

About admin

Check Also

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து 19 பேர் பலி

சைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.ஈராக், சிரியா, லிபியா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *