Breaking News
Home / மாவட்டம் / வரும் 15-ஆம் தேதி கடலூர்-பாம்பன் இடையே கஜ புயல் கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு

வரும் 15-ஆம் தேதி கடலூர்-பாம்பன் இடையே கஜ புயல் கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு

kajaகஜ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், மாநில பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் சத்யகோபால், வருவாய்த்துறைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அவர்களிடம் கஜா புயலுக்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதலமைச்சர் பழனிசாமி கேட்டறிந்தார். மேலும், புயலால் சேதம் அடைந்தால், மின் கம்பங்களை உடனடியாக சீரமைத்தல், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சாயும் மரங்களை விரைந்து அகற்றுதல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

About admin

Check Also

திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து! தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *