Breaking News
Home / தமிழீழ செய்திகள் / மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை 35 லட்சம் ரூபாய் பறிமுதல்

மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை 35 லட்சம் ரூபாய் பறிமுதல்

1லஞ்சப் புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய சோதனையில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளராக உள்ள பாபு என்பவர், வாகன தகுதி சான்று பெற 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது கையும், களவுமாக பிடிபட்டார். இடைத்தரகர் செந்தில் முருகன் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் செம்மண்டலம் நகரில் உள்ள பாபுவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் 35 லட்சம் ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இதனிடையே, பாபுவின் இடைத்தரகராக செயல்பட்ட செந்தில்குமாரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கோட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டில் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் 15 க்கும் மேற்பட்ட வங்கிகணக்குகள் மற்றும் 100 சவரனுக்கு மேற்பட்ட தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து செந்திகுமாரின் மனைவி மங்கையர்கரசியிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About admin

Check Also

திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து! தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *