Breaking News
Home / உலகம் / மகிந்த ராஜபக்சே மீது 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

மகிந்த ராஜபக்சே மீது 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

2பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றி விட்டதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மீது 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் இருமுறை நடைபெற்ற வாக்கெடுப்பிலும் ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மீது உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், பிரதமர் ராஜ பக்சேவும், அவரது அமைச்சர்களும் சர்ச்சைக்குரிய முறையில் நியமனம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைந்த நிலையில் ராஜபக்சே பிரதமர் அலுவலகத்தை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அவரது நியமனம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About admin

Check Also

திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து! தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *