Breaking News
Home / இந்தியா / ப.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய இடைக்கால தடை நீடிப்பு!!

ப.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய இடைக்கால தடை நீடிப்பு!!

aircelஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், விதிமுறைகளை மீறி ஏர்செல் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இந்த முதலீட்டிற்கு கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில், அமலாக்கத் துறையும், சி.பி.ஐ.யும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி இருவரும் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு செய்த நிலையில், அவர்களை அக்டோபர் 8ஆம் தேதி வரை கைது செய்ய தடையை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், முன்ஜாமீன் வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, ப.சிதம்பரம் நேரில் ஆஜரான நிலையில், அவரையும், கார்த்தி சிதம்பரத்தையும், நவம்பர் 1ஆம் தேதி வரை கைது செய்ய தடையை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

About admin

Check Also

நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! தமிழக அரசு எச்சரிக்கை!!

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தமிழக அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *