Breaking News
Home / தமிழ்நாடு / பொங்கல் சிறப்பு பரிசு தொகை வழங்கும் திட்டம்!

பொங்கல் சிறப்பு பரிசு தொகை வழங்கும் திட்டம்!

1பொங்கல் தொகுப்போடு சிறப்பு பரிசு தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
பொங்கல் சிறப்பு தொகுப்புக்கான அறிவிப்பு கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலாக்காய், கரும்புத்துண்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 2 கோடியே 1 லட்சத்து 91 ஆயிரத்து 54 நியாயவிலை அட்டைத்தாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க 258 கோடி ரூபாய் ஒதுக்கி ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டவாறு, பொங்கல் தொகுப்போடு, ஆயிரம் ரூபாய் சிறப்பு பரிசுத் தொகை வழங்க வகை செய்வதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. வருகிற திங்கட்கிழமை முதல் அந்தந்த நியாய விலைக்கடைகளில், பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்போடு ஆயிரம் ரூபாயை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். இன்று மாலை நடைபெறும் நிகழ்வில், பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை, 10 பேருக்கு வழங்கி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இதற்காக 1980 கோடி ரூபாயை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

About admin

Check Also

திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து! தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *