Breaking News
Home / தமிழீழ செய்திகள் / புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்-கருணாஸ்

புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்-கருணாஸ்

karunasசர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாசுக்கு அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் மற்றும் காவல்துறையினரை, சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் விமர்சித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைத்து கருணாஸை இன்று அதிகாலை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் கருணாஸ் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து கருணாஸை அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் புழல்சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ், வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

About admin

Check Also

திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து! தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *