Breaking News
Home / தமிழ்நாடு / புதைவட மின்கம்பிகள் கண்டுபிடிக்கப்படாததால், உயர்அழுத்த மின்கோபுரங்கள் அமைப்பதைத் தவிர, வேறுவழியில்லை

புதைவட மின்கம்பிகள் கண்டுபிடிக்கப்படாததால், உயர்அழுத்த மின்கோபுரங்கள் அமைப்பதைத் தவிர, வேறுவழியில்லை

1800-கிலோவாட் மின்சாரத்தை கொண்டு செல்லும் புதைவட மின்கம்பிகள் கண்டுபிடிக்கப்படாததால், உயர்அழுத்த மின்கோபுரங்கள் அமைப்பதைத் தவிர, வேறுவழியில்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். விளைநிலங்கள் வழியாக உயர்அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கக் கூடாது என விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, 800 கிலோவாட் மின்சாரத்தை கொண்டுசெல்ல புதைவட மின்கம்பிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றார். அமெரிக்காவில் கூட இத்தகைய புதைவடங்கள் இல்லை என்றும் குறிப்பிட்ட அவர், மின்கோபுரங்கள் அமைக்கும் இடத்திற்கான உரிய இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் மின் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும், இதை அனைத்து கட்சிகளும் உணர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் தங்கமணி கேட்டுக்கொண்டார். 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் கூறிய அமைச்சர் தங்கமணி, அரசியல் ஆதாயத்திற்காக விவசாயிகள் மத்தியில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

About admin

Check Also

திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து! தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *