Breaking News
Home / இந்தியா / பா.ஜ.க. ஆட்சியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் !!

பா.ஜ.க. ஆட்சியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் !!

NARENDRAMODIபா.ஜ.க. ஆட்சியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக, சட்டீஸ்கரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
சட்டீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல் நவம்பர் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜக்தல்பூரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, பா.ஜ.க, ஆட்சியில் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும், ஜாதி அரசியல் மிகுந்திருந்த சட்டீஸ்கரில் தற்போது அது காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் தன் மீது அதிருப்தியில் இல்லை என்றும், மாறாக தற்போதும் தன் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், நக்சல்களுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டையாக உள்ளதாகவும் பிரதமர் நரேந்திரமோடி குற்றம்சாட்டினார்.

About admin

Check Also

நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! தமிழக அரசு எச்சரிக்கை!!

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தமிழக அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *