Breaking News
Home / உலகம் / பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மீண்டும் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மீண்டும் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்!

srஅரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன நடத்திய அனைத்து கட்சி கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இலங்கையில் அரசியலில் அதிகார மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிய அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை நியமித்தார். ஆனால், ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்றம் கூட்டப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். இந்நிலையில், அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண அதிபர் சிறிசேனா நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அவரது அதிபர் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்கே தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டனர். இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்ததாக விக்ரமசிங்கே ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் இலங்கையில் மீண்டும் நாடாளுமன்ற கூட்டம் நடக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

About admin

Check Also

திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து! தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *