Breaking News
Home / தமிழ்நாடு / நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! தமிழக அரசு எச்சரிக்கை!!

நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! தமிழக அரசு எச்சரிக்கை!!

19565வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தமிழக அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும் அரசு எச்சரித்து உள்ளது.
இது குறித்து அனைத்துத் துறைச் செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எழுதியுள்ள கடிதத்தில், நாளை மற்றும் நாளை மறுநாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு ஒருசில தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி அரசு நிர்வாகத்தைப் பாதித்தால் அது விதிகளை மீறிய செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார். விதிகளை மீறும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வேலை நிறுத்தம் அன்று விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். ஒப்பந்தப் பணியாளர்களும் பிற பணியாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார். வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நாட்களில் ஊழியர்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட எந்த விடுப்பும் எடுக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நாட்களில் பணிக்கு வந்தவர்கள், வராதவர்கள் பட்டியலைப் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் குறிப்பிட்டுள்ளார்.

About admin

Check Also

திருவாரூரில் தேர்தல் நடத்த முடியுமா?! ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு!!

திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா? முடியாதா? என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *