Breaking News
Home / தமிழ்நாடு / திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிப்பு

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிப்பு

kalaivananதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில், திமுக சார்பில் பூண்டி கலைவாணனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.காமராஜூம் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கலைஞரின் மறைவை அடுத்து, காலியாக உள்ள திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை இறுதி செய்வதற்கான நேர்காணல், அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நேர்காணலில், வேட்பு மனுத் தாக்கல் செய்தவர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என திமுக அறிவித்துள்ளது. திமுகவின் திருவாரூர் மாவட்டச் செயலாளராக பூண்டி கலைவாணன் பொறுப்பு வகித்து வருகிறார். தமிழ்நாடு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலைக்குப் பின்னர், 2008ஆம் ஆண்டு திமுகவின் திருவாரூர் மாவட்டச் செயலாளராக பூண்டி கலைவாணன் பொறுப்பேற்றார். தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, திருவாரூர் மாவட்ட திமுகச் செயலாளராக பூண்டி கலைவாணன் பதவி வகித்து வருகிறார். இதேபோன்று திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், காமராஜ் போட்டியிடுவார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

About admin

Check Also

திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து! தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *