Breaking News
Home / மாவட்டம் / தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

balachandiranதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். தென் தமிழகத்திலும் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவித்த பாலச்சந்திரன், இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்யும் என்றும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளுர் மாவட்டம் புழல் பகுதியில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

About admin

Check Also

திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து! தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *