Breaking News
Home / தமிழீழ செய்திகள் / இராணுவத்தினருக்கு ரயில் சாரதி பயிற்சி

இராணுவத்தினருக்கு ரயில் சாரதி பயிற்சி

ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களைச் சமாளிப்பதற்கு 50 இராணுவத்தினருக்கு ரயில் சாரதி பயிற்சி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.இந்தியாவின் டெல்லி நகரில் அமைந்துள்ள ரயில் சாரதிகள் பயிற்சி நிறுவனத்துக்கு இராணுவ யுத்த வாகனம் செலுத்தும் சாரதிகளைத் தெரிவு செய்து அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சி பெற்றதன் பின்னர், பயிற்சி பெற்றவர்களை நாட்டில் ஏற்படும் அவசர நிலைமைகளின் போது பயன்படுத்த முடியும் எனவும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, புதிய ரயில்வே சாரதிகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த வருடம் கோரப்பட்டிருந்த நிலையில், அதற்கான ஆட்சேர்ப்புப் பரீட்சைகள் தொடர்ந்தும் பல தடவைகள் பிற்போடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

About admin

Check Also

போலி நாணயத்தாள் அச்சிட்ட இளைஞர்கள் கைது

அநுராதபுரம், கலன்பிந்துனுவெவ, படிகாரமடுவ பிரதேசத்திலுள்ள துருணேகல கொலணியில் வசிக்கும் 20, 23 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கலன்பிந்துனுவெவ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *