Breaking News
Home / உலகம் / இந்தியா-அமெரிக்கா இடையே,ஜூலை 6ம் தேதி வாஷிங்டனில் பேச்சுவார்த்தை

இந்தியா-அமெரிக்கா இடையே,ஜூலை 6ம் தேதி வாஷிங்டனில் பேச்சுவார்த்தை

இந்தியா -அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை வரும் ஜூலை மாதம் 6ம் தேதி வாஷிங்டனில் நடைபெறுகிறது. இந்தியா சார்பில் இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் , நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தை கடந்த ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட இருந்த நிலையில் அதிபர் டிரம்ப் அமைச்சர் ரெக்ஸ்சை நீக்கியதால் தடைப்பட்டது. தற்போது இந்தப் பேச்சுவார்த்தை ஜூலை 6ம் தேதி வாஷிங்டனில் நடைபெற உள்ளது. இதனால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கான சூழல் பிறந்துள்ளது. முதன் முறையாக நிர்மலா சீதாராமனும், சுஷ்மா ஸ்வராஜூம் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டிஸ் மற்றும் வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோவுடன் பேச்சு நடத்த உள்ளனர். கடந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடியும் அதிபர் டிரம்ப்பும் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இதற்கான திட்டம் உருவானது. பாதுகாப்பை பலப்படுத்துதல், பாதுகாப்புத்துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு, தீவிரவாத எதிர்ப்பு, உலகளாவிய பிரச்சினைகளை இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக எதிர்கொள்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இப்பேச்சுவார்த்தையில் இடம்பெறுகின்றன

About admin

Check Also

சட்டமன்ற தேர்தல் வரும் முன்பே அதிமுக ஆட்சி அப்புறப்படுத்தப்படும்-மு.க. ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தல் வரும் முன்பே அதிமுக ஆட்சி அப்புறப்படுத்தப்படும் என்று சேலத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *