Breaking News
Home / மாவட்டம் / அரசு தடை செய்யப்பட்ட கடல் பசுவை பிடித்த மீனவர்கள் 3 பேர் கைது!!

அரசு தடை செய்யப்பட்ட கடல் பசுவை பிடித்த மீனவர்கள் 3 பேர் கைது!!

தொண்டியில் அரியவகை கடல்பசுவை பிடித்த மீனவர்கள்! விற்க முயற்சிக்கும்போது பிடிபட்டனர்!
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே எம்.ஆர்.பட்டிணம் கடல் பகுதியில் சுமார் 10 நாட்டிக்கல் தொலைவில் தொண்டி அருகே கடற்கரையோர கிராமமான நம்புதாளை கடற்கரை பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று இரவு கடலில் வலை வீசி மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது அரிய வகை மீன் இனமாக கருதப்படும் கடல் பசு மீனவர்கள் வலையில் சிக்கியது.வலையில் சிக்கிய அரிய வகை கடல் பசு சுமார் 500 கிலோ எடை கொண்ட ஆண் கடல் பசுவாகும். அதிக விலைக்கு விற்கும் நோக்கத்தில் மீனவர்கள் அதை கடலில் விட்டுவிடாமல் கரை கொண்டு வந்துள்ளனர். 6 நிமிடத்திற்கு ஒரு முறை கடலின் மேற்பரப்பில் வந்து மூச்சுவிட்டு பின் கடலுக்குள் செல்லும் தன்மையுடையது கடல் பசு. வலையில் சிக்கியதை கடலில் விடாமல் கரை இழுத்து வந்ததால் இறந்தே கரை வந்தது.
அழிவின் விளிம்பில் 170 கடல் பசுக்கள் மட்டுமே உள்ளது. பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படும் இவை கடல் தாவரங்கள், புற்களை மட்டுமே உணவாக உட்கொள்கிறது. மீனவர்கள் கடல் பசுவினால் ஏற்படும் நன்மைகள் அறியாமல் வேட்டையாடுகின்றனர். இது தண்டனைக்குரிய குற்றமாகும்.
மேலும் பிடித்த கடல் பசுவை தொண்டி அருகே சவுக்குத்தோப்பு பகுதிக்கு கொண்டு வந்து வியாபாரியிடம் கடல் பசுவை பிடித்த மீனவர்கள் விலை பேசும்போது தகவல் தெரிந்த கடலோர காவல்படை சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் கடலோர காவல்படை போலீசார் சுற்றிவளைத்து மீனவர்களை பிடித்து கடல் பசுவை கைப்பற்றினர். இது சம்பந்தமாக கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

About admin

Check Also

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

சென்னை-கடலூர் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த கஜ புயல், கடலூர்-பாம்பன் இடையே வரும் 15-ஆம் தேதி கரையை கடக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *